• Sep 20 2024

வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் பூஜை எப்போது தெரியுமா?- ஷுட்டிங் தேதியும் முடிவு பண்ணியாச்சா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பபைத் துாண்டியுள்ளது.

படத்தின் பாடல், க்ளிம்ப்ஸ் வீடியோக்கள், போஸ்டர்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இந்த  மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.இதனை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் சூட்டிங் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அதிகமான ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


 இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அக்டோபர் 1ம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சென்னையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த நாளிலேயே படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அப்பா கேரக்டருக்கு ஜோதிகா நாயகியாகவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கேரக்டரில் சிம்ரன் அல்லது சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மகன் கேரக்டருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவுள்ளார். 

படத்தின் சூட்டிங் அதிகமான அளவில் சென்னையில் எடுக்கப்பட உள்ளதாகவும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement