தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இத் திரைப்படம் வசூலில் அள்ளிக் குவித்தது.
மேலும் இவர் இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் நடிகர்கள் குறித்த விவரங்களை தொடர்ந்து வெளியாகியவாறு இருக்கின்றன.
இதனிடையே விஜய்யின் 66-வது பட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்போதே தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார், அப்படம் விஜய்யின் 67-வது திரைப்படமாக உருவாகவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.
தளபதி 67 வது படத்தினை லலித் தயாரிக்கவுள்ளதோடு இப்படத்தின் பூஜை அக்டோபர் மாதம் 3 ம் திகதி போடப்பட்டு அன்றிலிருந்து ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் தான் மாஸ்டர் திரைப்படமும் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!