AK61 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். வலிமை திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பைக் ரேசிங் மற்றும் பைஃட் சீன்ஸ் எல்லாம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
இதனை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் இயக்கத்தில் AK61 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பித்தது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தினார்கள்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் ஆரம்பமாகியது. இந்த படப்பிடிப்பு காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். இதில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான Flowers டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மஞ்சு வாரியர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மஞ்சு வாரியர், நடிகர் அஜித் குழுவினருடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியதைக் காணலாம்.
Listen News!