• Sep 20 2024

தலைவர் 171 படத்தின் சூட்டிங் எப்போது ஆரம்பமாகும் தெரியுமா?- வெளியாகிய சூப்பர் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் -லோகேஷ் கூட்டணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் மாஸாக உருவாகியுள்ளது லியோ. சர்வதேச அளவில் அடுத்த மாதம் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக மாஸ்டர் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்த நிலையில், அந்தப் படத்தில் விஜய்யை ஆசிரியராக காட்டியிருந்தார் லோகேஷ். 

லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்னும் இரு தினங்களில் ரிலீசாகவுள்ளது.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கவுள்ளார்.


இந்நிலையில் ரஜினி, நவம்பரில் தன்னுடைய வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாராம். சிகிச்சை முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.    

 இதனிடையே ஜெயிலர் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்  ரஜினிகாந்த். மேலும் டிஜே ஞானவேல் இயக்கத்திலும் அவர் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் வரும் நவம்பரில் தன்னுடைய வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.


 அங்கு ஒருமாத காலம் சிகிச்சைக்காக செல்லவுள்ள ரஜினிகாந்த், பிறந்தநாளுக்கு முன்னதாக சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்தே அவர் லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement