• Sep 20 2024

வாரிசு படத்தின் ஷுட்டிங் முழுவதும் எப்போது முடிவடைகின்றது தெரியுமா?- லேட்டஸ்டாக வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படமானது விஜய்யின் 66வது படமாகும். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா தேர்வாகியுள்ளார்.


இப்படத்தில் குஷ்பு ,சரத்குமார், பிரபு, ஷாம் ,ஜெயசுதா ஆகியோர் நேடித்து வருவதாக ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்து. அத்தோடு இப்படம்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தெலுங்கானா என இரு இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகிறது.  படம் சம்மந்தமாக எந்தவொரு புகைப்படமும் வெளியாவதை விரும்பாத படக்குழு பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இப்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தோடு மொத்தமாக முடிகிறதாம். அதன் பின்னர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement