• Sep 20 2024

நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நஸ்ரியா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

அவர் பிரபல நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்ததால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி நடிப்பில் உருவாகியுள்ள Ante Sundaraniki என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரம் என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மே 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement