• Sep 20 2024

மாவீரன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?- வெளியாகிய மினி ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் இயக்குநர் மடோன் அஸ்வின் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் இவருடன்  அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி தான் ரிலீஸாக இருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக மாவீரன் ரிலீஸை ஜூலை 14ம் தேதிக்கு மாற்றியது படக்குழு. இதனிடையே மாவீரன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது மாவீரன் ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.


அதன்படி, மாவீரன் ட்ரெய்லர் ஜூலை 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக மினி ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ நீருக்கு அடியில் இருந்து சிவகார்த்திகேயன் கத்துவதாக உருவாகியுள்ளது. மாவீரன் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டால் சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் தனுஷ் ரசிகர்கள் செம்ம டென்ஷனாக காணப்படுகின்றனர்.

சிலமணி நேரங்களுக்கு முன்புதான் தனுஷின் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்குள் மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்கை விடவும் மாவீரன் ட்ரெய்லர் அப்டேட் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement