• Sep 20 2024

தனுஷ் பிறந்தநாள் இன்று ஐஸ்வர்யா எங்கு சென்றுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக திகழும் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இதற்கு பல பிரபலங்களும் பல ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் #Dhanush #Dhanushkraja #HBDDhanush ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் தனுஷை பிரிந்து வாழ்ந்தாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஐஸ்வர்யா ஒரு ட்வீட் போடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டா ஸ்டோரீஸில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவுக்கு சைக்கிளிங் செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்.

ஜஸ்வர்யா இன்று வியாழக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து சைக்கிளுடன் கிளம்பிவிட்டார். அந்த புகைப்படத்தையும், மேலும் அம்மன் சிலைக்கு முன்பு நின்று சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீயில் வெளியிட்டுள்ளார் .

அதை பார்த்த ரசிகர்கள் தெரிவித்திருப்பது….

தனுஷ் அண்ணாவுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்தீர்களா அண்ணி. வாழ்த்துக்கள் தனுஷ் என்று ஒரு ட்வீட் போட்டிருக்கலாமே.நாங்கள் சந்தோஷப்பட்டு இருபு்புர்மு்.

செஸ் ஒலிம்பியாட் பற்றி ட்வீட் செய்த தலைவர் தன் மருமகனை வாழ்த்தி ட்வீட் போட்டிருக்கலாமே எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவும், தனுஷும் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைதளத்தில் தெரிவித்தார்கள். இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement