• Nov 17 2024

வின்னர் பட வடிவேலுவின் கைப்புள்ள வீடு’எங்கிருக்கிறது தெரியுமா?- இத்தனை நடிகர்கள் போயிருக்கின்றார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன. கறுப்பு வெள்ளை சினிமாக்கள் முதல் டிஜிட்டல் டெக்னாலஜி படங்கள் வரையில் இந்த பசுமையும், வயல்களும், தோப்பும், பெரிய வீடுகளும் நிறைந்த பொள்ளாச்சி பகுதியை பல திரைப்படங்களில் பார்க்க முடியும்.


அந்த வகையில், இங்கே குடும்ப செண்டிமென்ட் படங்கள், அதிரடி காட்சிகள், விவசாயத்தை போற்றும் காட்சிகள் என பலதரப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது பிரபலமான பல நகைச்சுவை காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.


அதன்படி, பொள்ளாச்சிக்கு அருகில் சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மயிலடுதுறை என்ற ஊரில் (இது பொள்ளாச்சி அருகில் இருக்கும் மயிலாடுதுறை) நம்ம வைகைப்புயல் வடிவேலு அவர்களின் மிகவும் பிரபலமான எவர் கிரீன் காமெடி காட்சிகள் எடுக்கப்பட்டன.


வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ளையாக நடித்து கலக்கிய வடிவேலுவின் வீடு இங்குதான் இருக்கிறது. இந்த வீடு தனியாருக்கு சொந்தமான வீடாகும். இந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்துதான் நாம் விழுந்து விழுந்து சிரித்து வருகிறோம்.


வின்னர் படம் மட்டுல்லாமல் வேறு பல படங்களும் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. ஆர்.ஜே.பாலாஜி நடித்த எல்கேஜி படத்தில் வரும் ‘எத்தனை காலம்தான்’ என்ற பாடல் இங்குதான் எடுககட்டது. இந்த இடத்தில் இருந்து தூரத்தில் தெரியும் மலையின் அழகைப் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.


இதேபோல, விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் வரும் ‘யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்’ என்ற பாடலின் சில காட்சிகள் இந்த வீட்டிற்கு அருகில் எடுத்திருப்பார்கள்.


விஜய்-நயன்தாரா மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் இடம்பெற்ற ‘வாடா மாப்புள்ள வாழப்பம் தோப்புல’ என்ற பிரபல பாடலில் வரும் சில காட்சிகள் இந்த கைப்புள்ள வீட்டிற்கு அருகில்தான் எடுத்திருப்பார்கள். இதேபோல விஜய்-அனுஷ்கா நடித்த வேட்டைகாரன் படத்தில் வரும் ‘கரிகான் காலப்போல’ என்ற பாடலிலும் இந்த வீடு காட்டப்பட்டிருக்கும்.


அஜித்குமார்-சினேகா நடித்த ஜனா படத்தில் வரும், ‘பொதுவா பலருக்கு பத்து மாசம்’ என்ற பாடலின் சில காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டன.விஜய்-சூரியா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் பூசும் வானம்’ பாடலின் சில காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது.


சுராஜ் இயக்கத்தில் சத்தியராஜ்-ரம்பா நடிப்பில் 2003ஆம் ஆண்டில் வெளியான மிலிட்டரி படத்தில் வரும் ‘தேரோடும் வீதியில போற மாமா’ என்ற பாடலில் வரும் சில காட்சி இங்குதான் ஷுட் செய்யப்பட்டது. அந்த பாடலில் இந்த வீட்டை அழகாக காட்டியிருப்பார்கள்.


சுந்தர் சி. இயக்கத்தில் வினய், ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த திகிலும், காமெடியும் நிறைந்த அரண்மணை படத்தில் வரும் ‘மாயா மாயா’ என்ற பாடலின் சில காட்சிகளில் இந்த ‘கைப்புள்ள வீட்டில்’ வைக்கோலையெல்லாம் போட்டு படம் பிடித்திருப்பார்கள்.

விக்ரம் நடித்த ஐ படத்தில், இந்த வீட்டி மயிலை வரைந்து, அழகான வண்ணங்களைத் தீட்டி, கலைநயத்துடன் ‘ஐலா... ஐலா...’ பாடலில் காட்டிடியருப்பார்கள். இந்த பாடலில் இந்த அழகே வடிவான வீட்டை பல்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்கலாம்.

இதேபோல, கலகலப்பு படத்தின் வரும் ‘அவ திரும்பி பார்த்து சிரிச்சா‘ பாடல், எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தில் வரும் ‘வச்சிக்க வச்சிக்கவா’ பாடலின் சில காட்சிகள், அப்புச்சி கிராமம் படத்தில் வரும் ‘கண்ணுக்குள்’ பாடலின் சில காட்சிகள் என ஏராளமான திரைப்பட காட்சிகள் இந்த ‘கைப்புள்ள வீட்டில்’தான் எடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement