• Sep 20 2024

எதிர் நீச்சல் சீரியலின் புதிய குணசேகரன் இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?- இதனால் தான் சீரியலில் காணவில்லையா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெவ்வேறு பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

குறுகிய காலகட்டத்திற்குள் டிஆர்பியில் முதலிடத்தையும் இந்த சீரியல் பிடித்துள்ளது.பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்று இப்போதும் நிஜ வாழ்க்கையில் பலர் அனுபவிக்கும் கஷ்டங்களை இந்த சீரியல் காட்டி வருகின்றது.


இந்த சீரியலில் வில்லனாக நடித்த ஆதி குணசேகரனுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.இருப்பினும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறப்புக்குள்ளானார்.

இதனால் குணசேகரனாக யார் நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த நேரத்தில் வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.அவர் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருப்பதால் தொடரில் நடிக்க முடியுமா என தெரியவில்லை என்று பேட்டி கொடுத்தார்.பிஸியான படப்பிடிப்புகளுக்கு இடையில் ராம மூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் சின்ன சீனில் நடித்த அவர் அதன்பிறகு காணவில்லை.


இப்போது பார்த்தால் அவர் வெளிநாடு சென்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதனால் இவர் எப்போது மீண்டும் சீரியலில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement