தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சேனல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை வென்ற சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இதில் தமிழ் மக்களுக்கு பிடித்தது போல் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியல்கள் மட்டுமன்றி இதில் நடிப்பவர்களும் எளிதில் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து விடுவார்கள்.
இவ்வாறான சீரியல்களில் மக்களால் மறக்க முடியாத ஒன்று தான் 'கனா காணும் காலங்கள்'. அதாவது 2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு சென்டிமென்ட், காதல், குடும்பம், நண்பர்கள், கலாட்டா என எல்லா எமோஷனையும் கலந்து பேசியிருக்கும்.
அத்தோடு கனா காணும் காலங்கள் சீரியலில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் இன்றும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவே இருக்கின்றார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒருவர் தான் இந்த சீரியலில் நடித்த யுதன் பாலாஜி. இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து 'பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம்' போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் 2016-ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்த அவர் பின் ஒரு சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாட்டிலேயே இல்லையாம், ஆஸ்திரேலியாவில் இப்போது செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது. அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை கூட ஒரு சில நாட்களுக்கு முன் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.
Listen News!