நடிகர் அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க அஜித் கமிட்டாகியுள்ளார்.இப்படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.ஆனால் ஷுட்டிங் ஆரம்பமாவது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இதனால் அஜித் பைக் டூர் சென்றிருந்தார்.சமீபத்தில் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தனது பைக் பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே இந்த மாத இறுதியில் அபுதாபியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அஜித் இப்போது சென்னை வந்திருப்பதால் சென்னையிலாவது ஷூட்டிங் தொடங்குமா என்று ஒருபக்கம் கேள்வி எழுந்திருக்க; மறுபக்கம் அவரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தவகையில் விடாமுயற்சிக்கு பிறகு அவர் மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார். அப்போது அவரிடம் அஜித், நீ பெரிய படத்தை இயக்குவாய் என்று ஊக்கமளித்தார். அதனை ஆதிக்கும் மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் கூறினார்.
அதுமட்டுமின்றி எனது இந்த தனிப்பட்ட வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறியிருந்தார். எனவே அஜித்தை அவர் விரைவில் இயக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அஜித் ரசிகர்களோ முதலில் விடாமுயற்சியின் நிலைமை என்னனு தெரியட்டும் அதற்கு பிறகு இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!