விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய காதலியான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து விட்டார். அதிலிருந்து சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இப்போது பாக்கியா, கோபியிடம் வீட்டிற்கான ரூ. 18 லட்சம் மீதி பணத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக தெரிவித்திருக்கிறார்.அதற்காக ஒரு பெரிய கான்ட்ராக்ட் எடுத்து பாக்கியா சமைத்து வருகிறார்.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா. இவர் உடல் எடையை பிட்டாக வைத்துக்கொள்ள என்ன டயட்டில் இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காலை 4-6 மணிக்குள் ஜிம் சென்று முடிந்த வரை வொர்க்கவுட்ஸ் செய்வாராம்.
ஈஸியான கார்டியா பயிற்சி தான் திவ்யாவின் வழக்கமான வொர்க்கவுட்ஸ். டயட் பிஸ்கட், டயட் ரைஸ் போன்ற டயட்டுக்கு ஏற்றார் போலவே உணவுகளை எடுத்து கொள்வாராம்.அதிகளவில் சமைக்காத பச்சை உணவுகளையும் டயட்டில் சேர்த்து கொண்டாராம்.
முக அழகிற்காக வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுப்பாராம். நீர்ச்சத்து அதிகம் தேவை என்பதால் இளநீர், தர்பூசணி ஜுஸ், பழங்களை தினமும் உண்பாராம்.சரும விஷயத்திலும் சரி இதுவரை ஹோம்மெட், ஹெர்பல் தவிர எந்தவித கெமிக்கல் பொருட்களையும் திவ்யா கணேஷ் முகத்தில் டிரை செய்தது இல்லையாம் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!