• Sep 19 2024

'மண்ணாங்கட்டி' படத்தில் கமிட்டான நயனின் 75வது படம் எது தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமித்திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது அவர் நடிக்கும்  75ஆவது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் காணொளி வெளியாகியிருக்கிறது.

அத்துடன், நடிகை நயன்தாரா தற்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், மண்ணாங்கட்டி என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். 


மேலும் கடந்த மாதம் இறைவன் படம் வெளியானது. ஆனாலும் குறித்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அத்துடன், காதல் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார் நயன்தாரா. அவருக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட்டாக இருக்கிறார்.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, அவரது முதல் படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

இவ்வாறான நிலையில், நயன்தாரா நடிக்கும் 75ஆவது படத்தின் பெயர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. பூர்ணி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் குறித்த படத்துக்கு 'அன்னபூரணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 

Advertisement

Advertisement