• Sep 20 2024

விஜய்க்கு ரொம்ப பிடித்த உணவு எது தெரியுமா?..பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள படம் லியோ. விக்ரம் படத்தின் மிகபெரிய இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஹிட் ஜோடியான விஜய் -த்ரிஷா இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை என அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், படத்தின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அதாவது ;செட்டில் உள்ள மற்றவர்கள் வெளியில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், விஜய் மட்டும் எப்போதும் புரொடக்ஷன் உணவுகளை மட்டுமே சாப்பிட்டதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சாப்பிட்ட அதே உணவை விஜய்யும் சாப்பிடுவார் என்றும் ஆனால் அவருக்கு பிடித்தமான தோசை அந்த உணவில் இருப்பதை உறுதி செய்துக் கொள்வார் என்றும் லலித்குமார் கூறியுள்ளார். இதன்மூலம் விஜய்க்கு பிடித்தமான உணவு தோசை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement