• Sep 20 2024

காதலில் விழுந்த அனிருத்... காதலி யார் தெரியுமா..? அட அப்போ கீர்த்தி சுரேஷ் இல்லையா..?

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தாலும் குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பரவியது. இதன் காரணமாக ஒரே பாடலில் ஓஹோ என்ற புகழை அடைந்துவிட்டார் அனிருத்.


இதன் பின்னர் அவர் இசையமைப்பில் தொடர்ந்து படங்கள் வர ஆரம்பித்தன. அனிருத் எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். முக்கியமாக அவருடைய 19ஆவது வயதிலேயே தன்னுடைய 6 வயது மூத்தவரான நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கிசுகிசுக்கள் வெளியாகி இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதனை உறுதிப்படுத்தியிருந்தன.

இதனையடுத்து அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் இது பொய்யான செய்தி என்றும், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


இந்நிலையில் தற்போது மீண்டும் அனிருத்துக்கு திருமணம் என ஒரு செய்தி தலை தூக்கி உள்ளது. ஆனால் மணப்பெண் கீர்த்தி சுரேஷ் இல்லையாம். அதாவது அனிருத் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளுடன் உறவில் இருப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement