மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து சினிமா பத்திரிக்கையாளரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் டாக்டர் தான். சில்க் போதைக்கு அடிமையாகி இருந்த போது அவருக்கு உரிய சிகிச்சை அளித்து அந்த பழக்கத்தில் இருந்து அவரை மீட்டு இருக்க வேண்டும் ஆனால், அவரே போதை ஊசி கொடுத்து சில்க்கை கெடுத்து விட்டார்.
டாக்டரின் மகனை கதாநாயகனாக ஆக்க வேண்டும் என்று சில்க் ஆசைப்பட்டார். இதனால், படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அவரை கூடவே அழைத்து சென்று ஒரு சிலரிடம் வாய்ப்பும் கேட்டு இருக்கிறார். இதைப்பார்த்த டாக்டருக்கு சில்க்கை தவறாக நினைத்து அவர் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதை சில்க் ஸ்மிதாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.
சில்க் ஸ்மிதா ஒரு வெள்ளந்தியான பெண், அவரின் உறவினர்களான சித்தி,அத்தை போன்றவர்கள் அவரை ஏமாற்றி அவ்வப்போது பணத்தை வாங்கி சென்றார்கள். பணம் என்று கேட்பவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் சில்க் வாரி வாரி கொடுத்தார். கடைசியில் யாருமே இல்லாமல் அனாதையாக இருந்தார். சில்க் அவரது உறவினர்கள் மற்றும் அவரது கணவரை நம்பியே ஏமாந்தார்.
சில்க் கவர்ச்சி நடிகை மட்டுமில்லாமல், அவர் ஒரு திறமையான நடிகை பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் அந்த பாடம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. சில்க் ஸ்மிதாவின் கண்ணு மட்டுமே பல கதைகள் சொல்லும். வில்லியா,காமெடியா, கவர்ச்சியா என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் சில்க் ஸ்மிதா. 40 படத்தில் கதாநாயகி சம்பாதிப்பதை சில்க் ஸ்மிதா 4 படத்தில் நடனம் ஆடி சம்பாதித்து விடுவார்.
சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திக் கொண்ட நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஆட்டிவித்தவர் யார் என்றால் அது டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா தான். அவர் தான் சில்க்கிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு, நல்ல நடன ஸ்டெப்களை கொடுத்து அவரை பெயர் எடுக்க காரணமாக இருந்தார். சினிமா என்பது புகழையும் தரும், பணத்தையும் தரும். அந்த பெயரும் புகழுக்காக சிலவற்றை இழந்து நாம் பெறவேண்டி உள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் சில்க் ஸ்மிதா பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
Listen News!