• Sep 20 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தம் பெயரை கெடுத்த பிரபலங்கள் யார் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் எல்லோரும்  பிரபல்யமாகி அடுத்தகட்ட நிலைக்கு செல்லலாம் என்றே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால்  பிக்பாஸ் வந்த பலர் அதன் பிறகு சினிமாவில் உச்சம் தொட்டாலும் சிலர் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர் பின்னுக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐந்து பேர்  தம் பெயரை கெடுத்துள்ளனர்.


கஞ்சா கருப்பு

இவர் ரெம்பவே கஸ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் வேலைக்கு போகமாட்டாராம். இவர் திணை்ணையிலையே படுத்து கிடப்பாரம். இவர் இயக்குனர் பாலாவுக்கு தெரிந்தவர். ஒருநாள் பாலா வா படம் நடிக்கலாம் என கூட்டிப்போய் ஒவ்வொரு படமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கஞ்சாக்கருப்பு. படங்களில் காமெடியாக நடித்த இவர் சினிமாவில் அடுத்த கட்டமாக மேலே போகலாம் எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு பெரிதாக அவருக்கு பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

சரவணன்

இவர் 1990களில் நிறைய படங்களில் நாயகனாக நடித்திருக்கின்றார். இவர் பருத்திவீரன் படத்தில் ஒரு ரோல் பண்ணியிருந்தார். இந் நிலையிலையே பிக்பாஸ் வந்தார் ஆனால் அங்கும் ரசிகர்களிடத்தே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.


சேரன்

சேரனை பொறுத்தவரை  ஆட்டோகிராஃவ் படத்தின் மூலம் ரசிகர்களிடத்தே இடம்பிடித்தவர். பின்னர் திரைப்படங்களில் சிறிய ரோல்களிலே நடிப்பார். இப்படி இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் நல்ல வாய்ப்புக்கள் அமையும் என நினைத்து போனார் ஆனால் பெரிதாக அதன் பின்னர் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.


வேல்முருகன்

இவர் ஒரு சிங்கர். சின்ன சின்ன படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிப்பவர்.இவர் பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார். வேணா மச்சான் வேணா ... ஒற்ற சொல்லால ...என்ற இவரின் பாடல்கள் பிரபலமானவை. இதனால் இவர் பிக்பாஸ் வந்தாரு ஆனால் அதன் பிறகு நடிகராக பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் பாடகராக  ஔிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

பவா செல்லத்துரை

இந்ந சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பிக்பாஸ் போக முதல் நல்ல ஒரு மனிதர் என்ற பெயர் இருந்தது ஆனால் பிக்பாஸ் போய் வெளியேறியதன் பின்னர் அவருக்கு  எதிரான கருத்துக்களே அதிகம் வந்திருக்கின்றது. ஆனால் இவர்தான் பவா என ரசிகர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். ஆனால்  அவரை பற்றி தவறாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்

Advertisement

Advertisement