தென்னிந்திய நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகளில் ஒன்று தான் SIIMA. இந்த நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் நடைபெறறு வருவதுண்டு.அந்த வகையில் 11 ஆவது SIIMA விருது வழங்கும் விழா நேற்றைய தினம் துபாயில் நடைபெற்றது.
அந்த வகையில் இந்த நிகழ்வில் விருது பெற்றவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி,
சிறந்த அறிமுக நடிகர்- லவ்டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன்
சிறந்த நகைச்சுவை நடிகர்- லவ்டுடே திரைப்படத்திற்காக யோகிபாபு
சிறந்த அறிமுக நடிகை - விருமன் படத்திற்காக அதிதி ஷங்கர்
சிறந்த வில்லன் நடிகர் - டான் படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா
சிறந்த துணை நடிகர் - கார்கி படத்திற்காக காலி வெங்கட்
சிறந்த துணை நடிகை -விக்ரம் படத்திற்காக வசந்தி
சிறந்த கலை இயக்குநர் - பொன்னியின் செல்வன் படத்திற்காக தோட்டா தரணி
மேலும் சிறந்த நடிகர்- கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்திற்காக பெற்றார். அதே போல கிரிட்டிக்ஸ் சிறந்த நடிகைக்கான விருதை சாணி காகிதம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் பெற்றார்.ROCKETRY படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாதவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை லோகேஷ் கனகராஜும் பெற்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!