• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?- அடடே அசீமும் வருவாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்த பேச்சு தற்பொழுது இணையத்தில் அதிகமாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது.

அந்த வகையில் இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் நடித்த நடிகை ரவீனா தாஹா , நடிகை ரித்திகா, மாகாபா ஆனந்த் எனப் பல பிரபலங்கள் கலந்து கொள்வதாக அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


மேலும் இந்த முறை இரண்டு வீடுகள் இருப்தாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அத்தோடு அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இந்த ஆரம்ப நிகழ்ச்சியில் ஓவியா, அசீம் சாண்டி மாஸ்டர் மற்றும் ஆரி ஆகியோர் கலந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement