பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற நினைப்பவரை நேரடியாக நாமினேட் செய்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டனர்.இந்த வாரம் வழக்கம் போல் கன்பெஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெற்றது.
அதன்படி இந்த வாரம் ஆயிஷா, அசீம், ராம் ஜனனி,கதிரவன் ஏடிகே ஆகியோரே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று ஏற்கனவே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் தற்பொழுது குறைந்த வாக்குகள் பெற்றோரின் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி ராம் மற்றும் ஏடிகே தான் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் இவர்களே இந்த வாரம் வெளியேறுவார்கள் என்றும் கருதப்படுகின்றது.
Listen News!