விஜய், ரஜனி இருவரின் மார்க்கட்டும் தற்போது உச்சத்தில் தான் இருக்கின்றது. இவர்கள் நடித்தால் போதும் அப்படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆகிவிடும்.என்ற நிலையும் இருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டி வசூலித்த நிலையில் வர இருக்கும் லியோ 1000 கோடி தட்டித்தூக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இப்படி பாலிவுட் ரேஞ்சில் கொடி கட்டி பறக்கும் தமிழ் சினிமாவின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமான இரண்டு ஜாம்பவான்களும் இருக்கின்றனர்.
அதில் முதலாவதாக எம் ஜிஆரை தான் சொல்லவேண்டும். ஏனனில் அந்த காலத்தில் மக்கள் யாரும் பெரிய அளவில் திரையரங்குகளுக்கு வந்துபடங்களை பார்ப்பதை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எம்.ஜி ஆருக்காகவே பணம் செலவு செய்து படம் பார்க்க வந்த மேஜிக்கும் நடந்திருக்கின்றது. அதைத் தாெடர்ந்து தான் தமிழ் சினிமாவின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தாெடங்கி இருக்கிறது.
அதை சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கட்டி காத்து பெருமை தேடிக் கொடுத்துள்ளனார். அதற்கு அடுத்த கால கட்டம் என்பது இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருக்கின்றது. அவருடைய இசைக்காகவே மயங்கிய ரசிகர்களும் உண்டு என்றும் கூறலாம். இதனால் ரேடியோ மூலம் பாடல்களை கேட்ட ரசிகர்கள் ஆடியோ கேசட் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர். இதனாலையே தமிழ் சினிமாவின் வியாபாரமும் லாபத்தை நோக்கி நரத் தொடங்கியது எனலாம்.
Listen News!