• Sep 19 2024

'எதிர்நீச்சல்' சீரியல் அருண் யார் தெரியுமா..? இவருக்கும் அசினுக்கும் இப்படி ஒரு தொடர்பா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலிற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. 

அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் உள்ளது.


இந்நிலையில் இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சாணக்கியா. இவர் குறித்துப் பலருக்கும் தெரியாத விடயங்கள் தொடர்பாகப் பார்ப்போம். சாணாக்கியா குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் முதலில் அறிமுகமானவர். 


இவர் சீரியல்களில் மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்திருக்கிறார். அந்தவகையில் இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் கோபியின் மகனாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா- அசின் நடிப்பில் வெளியாகியிருந்த கஜினி படத்தில் அசின் ஒரு விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் அவருக்கு குழந்தையாக சாணக்யா தான் நடித்திருந்தார். 


இதனையடுத்து எஸ் ஜே சூர்யா நடித்த வியாபாரி படத்திலும் இவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். பின்பு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த பரமசிவன் படத்திலும் நடித்திருக்கிறார். சூர்யாவின் ஆதவன் திரைப்படத்திலும் குழந்தை பருவ சூர்யாவாக இவர் தான் முதலில் நடித்திருந்தார். 

அதுமட்டுமல்லாது ஜீ தமிழில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற சீரியலில் நடிகனாக நடித்திருக்கிறார். இவ்வாறு பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் நம்ம 'எதிர்நீச்சல்' அருண்.

Advertisement

Advertisement