• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் முதலாவது போட்டியாளராக நுழைந்தது யார் தெரியுமா?- கமல்ஹாசன் கொடுத்த கிப்ட்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்றைய தினம் இரவு 6மணியிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும்; ஏதேனும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த முறை 2 வீடுகள் கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களாக மொத்தம் 18 பேர் முதல் நாளிலேயே உள்ளே செல்ல உள்ளனர் என்றும் மேலும், சிலர் வைல்டு கார்டு என்ட்ரியாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் தற்பொழுது முதலாவது போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கமல்ஹாசன் அவருக்கு சுரேஷ் என்று பெயர் பொறிக்கப்பட்ட செயின் ஒன்றையும் வழங்கி உங்க முகத்தையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement