தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு இப்படம் ஜுன் மாதம் 3ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலுக்கு படவாய்ப்புக்கள் குவிந்து வருவதாக கூறப்படுகின்றது. அத்தோடு விக்ரம் படம் 420 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.
மேலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகின்றது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். கமல் - அனிருத் காம்போ மீண்டும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் டிவி ரிலியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல், அடுத்ததாக தான் மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படம் தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராகவும், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் மகேஷ் நாராயணன். விக்ரம் படத்தின் ஷூட்டிங்கின் போது, கமலை மகேஷ் நாராயணன் சந்தித்திருந்த போட்டோ செம வைரலாகி இருந்தது. இந்நிலையில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக சுசின் ஷ்யாம் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுசின் ஷ்யாம், 2018 இல் வரதன் மற்றும் 2019 இல் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமடையத் தொடங்கினார். அதன்பிறகு, வைரஸ், அஞ்சம் பத்திரா , கப்பேலா, டிரான்ஸ் , கிலோமீட்டர்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!