தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். எனினும் இவருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்தை கொடுத்தது 'முறை மாப்பிள்ளை' என்ற படமே. இதனைத் தொடர்ந்து 'இயற்கை, தவம், வேதா, மலை மலை' என மனதை விட்டு நீங்காத பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் இவர் நடிப்பிலும், ஹரியின் இயக்கத்திலும் சமீபத்தில் 'யானை' படம் வெளியாகி இருக்கின்றது. இப்படம் வெளியான நாள் முதல் இன்றுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து அங்கி சிறகுகள், பார்டர், பாக்ஸர் ஆகிய பல படங்களையும் தன்னுடைய கைவசம் வைத்திருக்கின்றார் இவர்.
இந்நிலையில் 'யானை' படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பல பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். அந்தவகையில் சமீபத்திலும் பேட்டி ஒன்றில் கலந்து கொன்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார். அப்போது அவரிடம் "உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?" என்று தொகுப்பாளர் ஒருவர் கேள்வி ஒன்றினை கேட்டிருக்கின்றார்.
இக்கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே "நடிகர் ரஜினிகாந்த்" என்று பதிலளித்துள்ளார் அருண் விஜய். இதைக்கேட்ட ரசிகர்கள் பலரும் நம்ம ரஜினிகாந்த்தை யாருக்குத்தான் பிடிக்காது எனக் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்
- மன்னிப்பு கேட்காமல் படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை…காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் சம்பவம்
- இந்தியப் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகை…டீசர் வெளியீடு
- பணத்திற்காக ஹீரோவின் புகைப்படத்திற்குப் பதிலாக காமெடியனின் புகைப்படத்தை வைத்த படக்குழுவினர்…கடுப்பாகிய யோகிபாபு
- சேலையில் சொக்க வைக்கும் டாப்ஸி…என்ன ஒரு அழகப்பா!
- கவர்ச்சியில் களை கட்டும் பிக்பாஸ் மதுமிதா…வாயடைத்துப் போன ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!