நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றது. இந்த நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வை யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது குறித்த தகவல்கள் பேசப்பட்டு வந்தன. அந்த வகையில், இந்த நிகழ்வினை பிக்பாஸ் ராஜூ மற்றும் விஜே ரம்யா தொகுத்து வழங்குகின்றனர்.இது குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!