• Nov 17 2024

கலைஞர்களின் இசையால் ஈஷாவில் களைகட்டப்போகும் மஹாசிவராத்திரி விழா... யார் யார் எல்லாம் வரப்போறாங்க தெரியுமா?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

ஈஷா மகாசிவராத்திரி விழா "நடராஜரை" வணங்கி கொண்டாடப்படும் பிரமாண்டமான ஒரு விழாவாகும். இதில் உலகளாவிய ரீதியில் பலரும் கலந்து கொண்டு பிரசித்தி பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடனத்தால் நடராஜரை வணங்கும் நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கம். 


இந்த நிகழ்வு 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவனுக்கு உகந்த இந்த ராத்திரியில் அவருடைய ‘நடராஜர்’ அம்சத்தை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்ச்சி நிலையில் காணுவர்.


அதேபோல இந்த ஆண்டும் பெப் 18ல் மஹாசிவராத்திரி தினத்தில் நிகழ்வுகள் பல இடம்பெற உள்ளது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான் ‘நடனம் ஆடும் ஒருவரை’ கடவுளாகவும் யோகியாகவும் போற்றி கொண்டாடுகிறோம்.


இந்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 


குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் திரு. வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் திரு. மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான திரு. நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் திரு. ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


இது தவிர, கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.


பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழா ஈஷாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.


மேலும் இந்த விழாவை தமிழில் மட்டுமில்லாமல்  இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளிலும் நேரலையில் காணக்கூடியதாக இருக்கும். கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement