சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் தெரிந்த ஒரு விடயம். இதற்கு முக்கிய காரணமாக அந்த தொடர்களினுடைய விறுவிறுப்பான கதைதான்.
சன் டிவி இல் ஒளிபரப்பாகி, காலம்தாண்டியும் மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றாகப் பார்க்க படுவது 'மெட்டி ஒலி, நாதஸ்வரம்' உள்ளிட்ட தொடர்கள் தான்.
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடும்பம் சகிதம் பலரும் விரும்பிப் பார்த்து ரசித்த தொடர் தான் 'மெட்டி ஒலி'. இந்த சீரியலையும் அதில் வரும் 'அம்மி அம்மி மிதித்து' என்ற பாடலையும் இன்றளவிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் சுவாரஸ்யம் குறையாமல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இந்த சீரியலின் வாயிலாக ஒளிபரப்பியிருந்தார்கள்.
மேலும் யதார்த்தம் மீறாமல், சீரியலுக்கான மிகைப்படுத்தல் இல்லாமல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த இந்த சீரியலை மீண்டும் பார்க்க பலரும் விரும்பினார்கள். இதனால் கொரோனா காலத்தில் இந்த தொடர் Re Telecast செய்யப்பட்டது.
இந்த நிலையில், ‘மெட்டி ஒலி 2’ சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் முதல் பாகத்தைத் தயாரித்த அதே ‘சினி டைம்ஸ்’ நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆனால் தொடரை இயக்கப் போவது திருமுருகன் இல்லை. அவருக்குப் பதிலாக இயக்குநர் விக்ரமாதித்யன் ‘மெட்டி ஒலி’ இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளாராம்.
மேலும், சீஇந்த சீரியலின் 2ம் பாகம் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சிலரிடம் பேசி உள்ள நிலையில், இதில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது தற்போது வரையில் சஸ்பென்ஸ் ஆக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!