இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை அடுத்து இவருடைய 51வது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.
அதன்படி இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தர், மற்றும் திரையரங்கு அதிபருமான நாராயண் தாஸ் கே. நாரங் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.
#D51 தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளன்று (ஜூலை-28) வெளியிட உள்ளனர். இந்த படத்தில் இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகின்றது.மேலும் இப்படத்தில் நடிக்கும் ஏனையோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!