• Sep 20 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை தமிழில் வெளியிடப்போவது யார் தெரியுமா?- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.நாளை சென்னையில் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற போகிறது

ஹிந்தி டீசரை பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட போகிறார் என சற்று முன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அடுத்த அறிவிப்பாக பொன்னியின் செல்வன் மலையாள டீசரை நடிகர் மோகன்லால் வெளியிட போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடப் போவதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே போல தமிழில் கமல் அல்லது ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது. விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement