சன்டிவியில் பெண் ஒடுக்கு முறையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல்.இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மாரிமுத்து. தற்பொழுது இவர் இந்த சீரியலுக்கு எப்படி வந்தார் என்பது குறித்து தான் பார்க்கப் போகின்றோம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகக் கடமையாற்றினார். தொடர்ந்து கண்ணும் கண்ணும் என்னும் படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்தும் சில திரைப்படங்களை இயக்கி இருந்த இவர் பின்னர் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகின்றார்.
இவர் சினிமாவிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று சென்னைக்கு வந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டாராம். ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்காக இவருடன் ரூமில் இருந்தவர்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி போய் விட்டார்களாம். ஆனால் இவர் மட்டும் தனியாக ரூமில் இருந்தாராம். அந்த நேரம் சாப்பாட்டுக்கும் காசில்லாததால் வெறும் ஊறுகாயை மட்டும் மூன்று நாட்களாக சாப்பிட்டிருந்தாராம்.
இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விட்டு விட்டாராம்.பின்னர் ஊருக்கு போய்ட்டு வந்த நண்பர்கள் தான் இவரை வைத்திய சாலையில் சேர்த்தார்கள் என்றும் இவர் ஒரு இன்டர்வியூவில் தெரிவித்திருந்தார்.இவர் முன்னேறுவதற்கு முக்கிய காரணமே இவருடைய மனைவி தானாம். அவர் தான் இவருக்கு நல்ல உறுதுணையாக இருந்தாங்களாம்.
மேலும் தொடர்ந்து இயல்யாக நடிக்கக் கூடிய இவர் கடந்த 2010ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தாராம்.பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் கதாநாயகனாக நடித்தாராம். தொடர்ந்து கொம்பன் ஆரோகணம் மருது கத்தி சண்டை கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவர் திரைப்படத்தில் நடிக்கும் போதே சீரியலில் நடிக்கும் போது தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்து வந்ததாம். ஆனால் அவர் சீரியலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் தான் மூன்று மணி நேரமாக இந்த சீரியலை பற்றி பேசித் தான் இவரை சீரியலில் நடிக்க சம்மதிக்க வைத்தார்களாம். அத்தோடு திரைப்படத்தை விட இந்த சீரியல் தனனக்கொரு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாக பல இன்டர்வியூக்களில் வெளிப்படையாகக் கூறி வருகின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!