• Sep 21 2024

கேஜிஎப் யாஷின் சகோதரி யார் தெரியுமா? அடடே இருவரும் என்ன செய்யிறாங்க பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

கன்னட சினிமாவில் 2007 ம் ஆண்டு துணை நடிகராக அறிமுகமாகியவர் தான் யாஷ். இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் தான் கேஜிஎஃப். இப்படத்தின் பின்னர் பிரபலமான நடிகராக மாறி விட்டார்.

இதனைத் தொடர்ந்து வெளியாகிய கேஜிஎஃப் 2 திரைப்படம் இவரை தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாற்றியுள்ளது. இதனால் நீல் கேஜிஎஃப் 3 படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த படத்தின் சில சீன்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக யாஷ் பல பேட்டிகளில் குறி உள்ளார்.

இதற்கிடையில் யாஷின் அடுத்தடுத்த படங்கள் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இருக்கையில் கேஜிஎப் நாயகன் ராக்கி பாய் தனது சகோதரி நந்தினியுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது சமூகம் வலைத்தளத்தில் பதிவிட்ட யாஷ், அந்த பதிவில் உடன்பிறப்புகள் வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்..

இந்த புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு வைரல் ஆகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement