• Sep 21 2024

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் 10வது போட்டியாளர் யார் தெரியுமா?- இவர் பிரபல நடிகராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது குக்வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியானது நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வித்தியாசமாக இந்த முறை புதிய பிரபலங்கள் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர்.இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.

மேலும் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக களமிறங்கியுள்ளார்.மேலும்  இந்த தொடரில் தற்போது மொத்தம் 9 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். 


இன்னும் ஒரே ஒரு போட்டியாளர் அடுத்த வாரம் ஷோவில் இணைவார் என முதல் எபிசோடில் தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்தார்.அது யாராக இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது.பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோமாளி 4ன் பத்தாவது போட்டியாளர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும்  சிவாங்கி தற்போது குக் ஆக வந்திருப்பதால் அவரை போட்டியாளராக பார்த்து புகழ் உள்ளிட்ட எல்லோரும் ஷாக் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement