இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’ தான். தமிழில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேபோல, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தமிழைப் போலவை தெலுங்கிலும் 6 சீசன்களைக் கடந்து தற்போது ‘பிக்பாஸ் 7’ வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் நடிகை கிரண் வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் நடிகை ஷகீலா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!