• Sep 20 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தை பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.  இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.


 பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் இதன் படப்பிடிப்பு  நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இந்த படத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது.ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.


 ட்ரெய்லரில் சாரா தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாரா, ஏற்கனவே தெய்வத் திருமகள், சில்லுக் கருப்பட்டி, சைவம் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement