• Sep 20 2024

BB ஜோடிகள் டைட்டில் வின்னர் யார் தெரியுமா..? என்ன ஒரு ருவிஸ்ட்..பரிசு தொகை இத்தனை லட்சமாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு ஏத்தற்போல வித்தியசமான முறையில் ஒளிபரப்பாகும்.இவ்வாறு இருக்கையில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பிரபலங்களை நடனம் ஆட வைத்து நடத்தப்படும் ஷோ BB ஜோடிகள்.

மேலும்  இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும்.

அந்த வகையில் தற்போது BB ஜோடிகள் இரண்டாம் சீசன் மிகவும் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது. அதன் பைனல் இன்று ஒளிபரப்பானது.



இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது அமீர் - பாவனி ஜோடியா, இல்லை சுஜா - சிவகுமார் ஜோடியா என்கிற நிலை வந்தது. நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதிஷ் இருவரும் பிக் பாஸ் ஸ்டைலில் கையை தூக்கி வெற்றியாளரை அறிவிப்பதாக கூறினார்கள்.



இறுதியில் இருவருமே கையை தூக்கி இரண்டு ஜோடிகளுமே டைட்டில் வின்னர் என அறிவித்தனர். அதனால் அமீர் - பாவனி மற்றும் சுஜா - சுஜா இரண்டு ஜோடிகளுக்குமே வின்னர் என கேடயம் வழங்கப்பட்டது.



அவர்களுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. அதை இரண்டாக பிரித்து ஒரு ஜோடிக்கு 2.5 லட்சம் ருபாய் கிடைக்கும். 





Advertisement

Advertisement