• Sep 20 2024

நடிகை கிருத்தி ஷெட்டியின் க்ரஷ் யார் தெரியுமா?- அட இவரை யாருக்குத் தான் பிடிக்காது

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகளின் நம்பிக்கை வரவாக காணப்படும் நடிகை தான் நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் குறுகிய காலத்துக்குள்ளேயே முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். 18 வயதேயான இவர் தன்னுடைய சிறப்பான படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது லிங்குசாமியின் இயக்கத்தில் தி வாரியார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இடம் பெறும் புல்லட் பாடலில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் கிருத்திக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அத்தோடு தமிழில் அவருடைய க்ரஷ் யார் தெரியுமா. அது வேறு யாரும் இல்லை சிவகார்த்திகேயன் தானாம். டான், டாக்டர் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இவர் கொடுத்துள்ளதால் அவருடன் இணந்து நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

இந்நிலையில் இவரது ஆசை விரைவில் நிறைவேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மண்டேலா படத்தின் இயக்குநர் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள அடுத்தப்படத்தில் கிருத்தி ஷெட்டிதான் ஹீரோயின் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement