இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்ரப்பட்டது.
அது ஒரு பக்கம் இருக்க லியோ திரைப்படம் LCUவில் இணையுமா இணையாதா? அவர் நடித்தாரா? இவர் நடித்தாரா? என பல கேள்விகள் படம் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளாரா என்ன சந்தேகமும் ரசிர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
லியோ படத்தில் கமல் ஹாசன் நடிக்கவில்லையாம், வாய்ஸ் ஓவர் பேசியுள்ளாராம் அது என்னவெனில் லோகேஷ் கனகராஜ் கமலுடன் டப்பிங் சென்ரருக்கு சென்றுள்ளார். அங்கு கமலின் குரலினை பதிவு செய்துள்ளதாகவும் இப்படத்தில் ஸ்ரோறி ரெல்லர் ஆக கமல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார். எனவும் இதில் விஜய்யும் கலந்து கொண்டு கமல் பேசுவதை கேட்டு இரசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!