• Nov 19 2024

பாலிவூட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?- இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் தீபிகா படுகோன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள தீபிகா படுகோனுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை தீபிகா படுகோன் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் பதான் படம் வெளியானது. இந்தப் படத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா படுகோன். பதான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக தீபிகா படுகோன் காவி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி வருகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.


ஆனால் பதான் திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பதான் . சமீபத்தில் வெளியான இந்திப் படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையையும் பதான் படம் பெற்றுள்ளது.

பதான் படம் வசூலை குவித்து வரும் நிலையில் நடிகை தீபிகா படுகோன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை தீபிகா படுகோன் 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதன் மூலம் பாலிவூட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோன். மேலும் ‘ப்ராஜெக்ட் கே’ என்ற இந்த படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் திஷா பதானி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.

தீபிகா படுகோன் போன்றே பல முன்னணி நடிகைகளும் தங்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement