• Nov 10 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வில்லன் யார் தெரியுமா?- அட இவரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இந்தத் திரைப்படத்தில் விக்ரம் கார்த்தி ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இப்படத்தின் டீசர் ஜுலை கடந்த 8ம் திகதி வெளியாகி இதுவரை 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படம் ஐஸ்வர்யா ராயுக்கும் த்ரிஷாவுக்கும் நடக்கும் போட்டியாகவே சித்தரிக்க முடியும். அந்தளவிற்கு இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நந்தினியான ஐஷ்வர்யா ராயின் உண்மையான கதை தெரிந்தால் அவரை வில்லி என்று சொல்ல யாருக்கும் மனம் வராது.இதுதவிர தனது சித்தப்பா சுந்தரச் சோழனுக்கு அதாவது பிரகாஷ்ராஜுக்குப் பிறகு சோழ தேசத்துக்கு தானே அரசராகவேண்டும் என நினைக்கிற ரஹ்மான் கூட ஒருவகையில் வில்லன் தான்.

இதுதவிர பாண்டிய நாட்டைச் சேர்ந்த ரவிதாசன், சோமன் சாம்பவான், இடும்பன்காரி, தேவராளன், கிரமவித்தன், ராக்கம்மாள் ஆகியோரும், வில்லன்களாக இருக்கின்றனர்.இவர்களை தவிர பார்த்திபேந்திர பல்லவன், கந்தமாறன், சம்புவரையர், பழையாறை மருத்துவரின் மகன் பினாபகாணி ஆகியோர் சோழ குலத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்தாக மாறிவிட்டனர்.

கடைசிவரை பொன்னியின் செல்வன் கதையில் சூழ்ச்சி, சூழல்களால் சிலர் வில்லன்களாகக் காட்டப்படுவார்களே தவிர, இவர்தான் வில்லன் என கல்கி சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். கல்கியின் இதே நிலைப்பாட்டை வைத்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறாரா? இல்லை படத்திற்கு வில்லனை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக நந்தினி போன்ற கதாபாத்திரங்களை எதிரியாக காட்ட முயன்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement