தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான நடிகர் சூரி. இவர் பின்பு கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகனாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூரி துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' எனும் முழு நீள திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி பகுதிகளில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி என இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!