• Sep 20 2024

குக்வித் கோமாளி சீசன் 4 இன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி. எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களோ, அதை போல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கும், ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வருகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் சிலருக்கு, அவர்கள் தங்களின் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிப்பதற்காக மருத்துவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க பரிந்துரைப்பதாக சில தகவல்களும் கடந்த சீசனில் போது பரவியது.


இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சீசனும் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த வாரம் கிராண்ட் பினாலே ஷோ ஒளிபரப்பப்படலாம் என்று கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் இன்றைய தினம் அதற்கான ஷுட்டிங் நடைபெற்று வருகின்றது. இதனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விடும். இப்படியான நிலையில் ஷிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் இவர்களில் யாரோ ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement