• Sep 20 2024

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகவும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சேனலாகவும் திகழும் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. 

அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களிடையே தமிழின் பெருமையை பேசும் வகையில் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.


 கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.முதல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழின் பெருமையை பேசி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அருண், பிரிட்டோ, கார்த்திக் ராஜா, ராகவேந்திரன் மற்றும் நாராயணன் கோவிந்தன் ஆகிய ஐந்து பேர் இறுதிச்சுற்றில் ஆகியோர் தேர்வாகினார்கள்.


அதன் படி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராகவேந்திரனும் ரன்னர் அப்பாக பிரிட்டோவோம் தேர்வாகியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement