இயக்குநர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருவதால் பிரபலங்களும் ரசிகர்களும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சிம்பு கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகும் பத்து தல படத்தில் நடித்த வருகின்றார்.2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது.
நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம்.இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது.
நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது இத் திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!