• Sep 20 2024

அச்சு அசல் ரஜினிகாந்த் மாதிரியே இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?- அடடே இவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம் என கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானவர் தான் நளினிகாந்த். ஆரம்பகாலங்களில் இவரும் ரஜினியும் ஒன்றாக சுற்றியவர்களாம். பாலசந்தர் ரஜினியை அழைத்துக் கொண்டு ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார் என்றும் தெலுங்கு இயக்குநரான தசரி நாராயண ராவ் இவரை தெலுங்கு பக்கம் அழைத்துக் கொண்டு சென்று நளினிகாந்தாவாக மாற்றிவிட்டார் என்றும் கூறினார்.

பொதுவாக பாக்யராஜின் சூப்பர் ஹிட் படங்களில் பெரும்பாலான முக்கியமான கதாபாத்திரங்களில் நளினிகாந்த் தான் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் வில்லனாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். அதனாலேயே பாக்யராஜ் மீது அதிக அன்பு கொண்டவராக இன்று வரை நளினி காந்த் இருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினியை பற்றி ஏராளமான கேள்விகள் நளினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதாவது அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்ததும் உங்கள் லாபம் இருந்ததா? அல்லது நஷ்டமடைந்தீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் கண்டிப்பாக நஷ்டம்தான் என்று சொன்னார். லாபம் அடைந்திருந்தால் அவரை விட பெரிய புகழை அடைந்திருப்பேனே! என்று கூறினார்.

மேலும் பல பேர் குறிப்பாக டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம் என்னை ரஜினி என்றே நினைத்து உடல் நிலை விசாரித்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அந்த காலத்தில் அப்படியே நானும் ரஜினியும் ஒரே மாதிரிதான் இருப்போம் என்றும் ஒன்றாகத்தான் சுற்றினோம் என்றும் கூறினார். 

இப்போது பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நளினிகாந்த் பல சீரியல்களை தயாரித்துக் கொண்டும் இருக்கிறாராம். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement