நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
2020 ஆம் ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார் காஜல். இவருடைய மகன் நீல் பிறந்து 6 மாதங்கள் ஆன பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் காஜல் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாகியுள்ள காஜல். இந்த படத்தில் நடிப்பதற்காக குதிரை ஏற்றம், களரி உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதே போல் இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 108 ஆவது படத்தில், இவர் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாககூறப்படுகிறது.
காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்ற தங்கையும் உள்ளார்.அவர்கள் இருவரும் சிறுவயது முதல் இப்போது வரை அழகான பிணைப்பை கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் தற்பொழுது காஜல் அகர்வால் தனது தங்கையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.
Listen News!