• Sep 20 2024

லியோ படத்தில் விஜய்யின் அப்பா யார் தெரியுமா?- அதிரடியாக வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தில் தொடங்கி மல்லுவுட் நடிகர் மாத்யூ தாமஸ்வரை ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில் ஜூன் மாதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒட்டுமொத்தமாக ஷூட்டிங் முடிந்துவிடும் என தகவல் கசிந்துள்ளது.

 இப்படி இருக்க லியோ படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி, பாட்ஷா படத்தில் ரஜினி எப்படி மிகப்பெரிய டானாக இருந்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்துவிட்டு அமைதியாக சென்னையில் வாழ்வாரோ; அதேபோல் மிகப்பெரிய கேங்ஸ்டரான விஜய் தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் வாழ்வார். அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை என கூறப்படுகிறது.


அதேபோல் விஜய் இதில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம் எனவும் சிலர் பேசுகின்றனர். மேலும் அர்ஜுன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவர் விஜய்க்கு முதலில் நண்பராக இருந்துவிட்டு துரோகியாக மாறுவது போன்றுதான் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என முதலில் கூறப்பட்ட சூழலில் அதெல்லாம் இல்லை விஜய்க்கு சகோதரராக அர்ஜுன் நடித்திருக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியானது.


இப்படி பல தகவல்கள் உலாவிக்கொண்டிருக்க கேஜிஎஃப்பில் வில்லனாக கலக்கிய சஞ்சய் தத்துக்கு என்ன ரோல் என பரவலாக பேசப்பட்டது. அவர்தான் படத்தின் மெயின் வில்லனாக இருப்பார் எனவும் கணிக்கப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் கேரக்டர் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய்க்கு தந்தையாக நடிக்கவிருப்பதே சஞ்சய் தத்தானாம். அவரும் படத்தில் கேங்ஸ்டராகத்தான் நடித்திருக்கிறாராம் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement