மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும் கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர் என இன்னும் சில முகங்களும் இவருக்கு உண்டு. இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாகவும் , நடிகர்களாகவும் உள்ளனர்.
அத்தோடு சமீப காலமாக நடிகர் சீனிவாசன், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். காரணம் கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
சமீபத்தில் கூட திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமாகி வீடு திரும்பினார். இருந்தாலும் அவரது உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறி மாறியது. இவரது ரசிகர்களை கவலையடைய செய்தது.
அத்தோடு இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் சீனிவாசன். அவரை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த அவருக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர்.
அவரது மெலிந்த தோற்றத்தை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்
- ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன்-6 ப்ரமோ…தொகுப்பாளர் இவர் தானாம்..!
- ஆறு வாரங்களில் ஜெனிலியா செய்த செயல்-எப்படி முடிந்தது..? வைரலாகும் வீடியோ..!
- லெஜண்ட் சரவணனின் நடிப்பை பார்க்க நேரில் சென்ற சூப்பர்ஸ்டார் -வைரலாகும் புகைப்படம்..!
- விருமன் பட பாடல் சர்ச்சை -திடீரென பாடகி ராஜலட்சுமி கொடுத்த விளக்கம்
- குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சுனிதாவிற்கு இப்படியொரு பிரமாண்ட வீடா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!