• Sep 19 2024

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி யார் தெரியுமா?- இத்தனை சீரியல்களில் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர். எனவே ரோகினி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் குறித்து தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

இவருடைய உண்மையான பெயர் சல்மா அருணாகம் சென்னையைச் சேர்ந்த இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்ததோடு தன்னுடைய கல்வியையும் சென்னையில் தான் மேற் கொண்டார். கல்லுாரிப் படிப்பை முடித்த பின்னர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என சேர்ந்ததோடு மாடர்லிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்தார்.


இவர் 10 10ற்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நம்ம வீட்டுப் பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களிலும் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய அமுதாவும் அன்னலக்ஷ்மியும் என்ற சீரியலிலும் நடித்திருக்கின்றார்.


இதனை அடுத்தே இவருக்கு சிறகடிக்க ஆசை என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement